சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

நடிகர் சங்க கட்டட பணிகள் தொடக்கம்!
Updated on : 26 July 2017

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சங்க கட்டடப் பணிகள் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.



 



இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், "தடையை உடைத்து அடுத்தகட்ட வேலையை நோக்கி நகர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தடை வாங்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நிலத்தில் எந்த சர்ச்சையும் இப்போது இல்லை.



 



நடிகர் சங்க கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தகட்ட பணிகள் நாளை முதல் தொடங்கும். நடிகர் சங்க கட்டட பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து பிரமாண்ட விழாவோடு திறப்பு விழா நடக்கும். எந்த தவறுகளும் நடிகர் சங்க கட்டட பணிகளில் நடக்காது.



 



எங்கள் கை சுத்தமானது. ஒரு நடிகர் தன்னுடைய கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. கமல் ஹாசன் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் , ஒரு நடிகனாக அவருக்கு பின் இந்த விஷால் நிற்பான். கமல் அவர்கள் அரசுக்கு எதிராக பேசுவதால் கேளிக்கை வரி பிரச்னை முடிவடையாமல் இருக்கிறது எனும் தகவல்களில் உண்மையில்லை. GST சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. 120 க்கு மேல் உள்ள டிக்கெட் கட்டணத்திற்கு 28% ஜி எஸ் டி விதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறோம். தற்போது 100க்கு மேல் 28% வரி பிரிக்கப்பட்டிருக்கிறது.



 



ஆபாச இணையதளங்களுக்கு  தடை விதிக்கும்போது, திருட்டுதனமாக படங்களை வெளியிடும் தளங்களை நிச்சயம் தடுக்க முடியும். நமது மத்திய அரசு நினைத்தால் ஒரே வருடம் அல்லது ஆறு மாதத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவதை தடுக்க முடியும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்" என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா