சற்று முன்

அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’   |    அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி   |    பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா   |    'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |   

சினிமா செய்திகள்

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!
Updated on : 05 August 2017

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி சினி சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



 



அந்த மனுவில், "தனியார் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகைகள் ஆபாச உடையணிந்து வருகின்றனர். மேலும் அடித்தட்டு மக்களை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர். அடிக்கடி இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.



 



இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் தமிழக மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், ஆபாச உடை, ஆபாச செய்கைகளால் இந்நிகழ்ச்சியை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகளுடன் இந் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது.



 



பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற எல்லையை மீறி தமிழக கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் எதிராக உள்ளது. எனவே, பொதுநலன் கருதி இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.



 



இதேபோல், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கமும் வழக்கு தொடுத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா