சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் அரசியல் வருகை கருத்து - பார்த்திபன் விளக்கம்
Updated on : 07 August 2017

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பார்த்திபன் அளித்த பதில் சலசலப்பை ஏற்படுத்தியது.



 



இந்நிலையில், அதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர். என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் " பார்த்திபனை நாயகனாக போட்டு படம் எடுங்கள்" எனத் தூண்டியவர்.



 



'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தைப் பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில் என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரணத்திற்கு "எந்த கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோயிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்" என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்க மாட்டார்.



 



நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).



 



இதே கேள்விகளுக்கு இதே பதில்களை, இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன். சிறு சலசலப்புமில்லை. ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.



 



இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டரகளாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜனி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் "நீங்களுமா?" என அதிர்ந்திருக்கிறார்கள் அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன்.



 



நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா