சற்று முன்

அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’   |    அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி   |    பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா   |    'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |   

சினிமா செய்திகள்

படமாகும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை வாழ்க்கை!
Updated on : 09 August 2017

ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு கான்சர்ட் ஜேனரில் உருவாகியுள்ள 'ஒன் ஹார்ட்' திரைப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.



 



கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம்.



 



ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்டஇசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட்.



 



இப்படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது.  இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும்  இடம்பெற்றிருக்கின்றன.



 



"இது வரை நீங்கள் ஏ ஆர் ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதை கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசைநிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாடவேண்டிய மற்றும் இடம்பெறவேண்டிய நிகழ்வுகளின் வரிசை பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள். அதனை சுவைப்பட சொல்வது தான் இந்த படம்" என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா