சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ ஒன்றிணைந்த திரையுலகம்!
Updated on : 12 August 2017

மெரினா கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மீண்டும் நிறுவ வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு திரையுலகினர் கடிதம் எழுதியுள்ளனர்.



 



தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் இயக்குநர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதம்:



 



"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. இந்திய சினிமாவை முதன் முதலில் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர் அவர். இயக்குநர் ராஜ்கபூர், சிவாஜியின் முகலட்சணம் நடிப்புக் கலைக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றார். அமிதாப் பச்சன் சிவாஜியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். நடிப்பில் ஆல் ரவுண்டர் திலீப் குமார் நடிப்பில் சிவாஜிக்கு நிகர் கலையுலகில் எவருமில்லை என்று பாராட்டினார்.



 



அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ "சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர்" என்று புகழாரம் சூட்டினார். நடிப்புக்கலைக்கு உலகின் எந்த பகுதியில் களம் அமைத்தாலும் அந்தக் களத்தில் தன் நடிப்புத்திறனால் பெரும் வெற்றி கண்டவர் நமது நடிகர் திலகம்.



 



இப்படி கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவரை அடையாளம் கண்டு அரங்கேற்றியவர் பேரறிஞர் அண்ணா. பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பாசறையில் உருவான அண்ணா, தமிழ்த் திரைப்படங்களில் அரசியலைப் புகுத்தி 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சியையே புரட்டிப் போட்டவர். அவர் அன்று கைப்பிடித்த அரியணை வேறு எவர் கையிலும் சிக்காமல் இன்றும் ஆலமரம் போல தழைத்துக் கொண்டிருக்கின்றது.



 



தமிழர்களும், தமிழும் ஆட்சியில் ஏறி அமர தமிழ்த் திரைப்படங்களும் தமிழ் முன்னணி நடிகர்களும் பெருமளவில் தங்களது உழைப்பை பங்களிப்பாக கொடுத்திருக்கின்றனர் என்பதை நம்மை விட அண்ணாவின் தம்பிகளுக்கு தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் தமிழ் மக்கள் அறிவார்கள்.



 



சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பேசிய தமிழ் உலக மக்களிடம் தமிழ் மொழியின் வளமையை எடுத்துச் சென்றது. தமிழர் வாழ்வியல் கருத்துக்களையும், தமிழ் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டியது.



 



உரைநடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். தாய்த்தமிழ் அன்னையின் மூத்த மகனான அவர் மறையவில்லை. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த்தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.



 



எனவே, சிவாஜி கணேசனின் நல்லுருவச் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று அன்புடன் எங்களது கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா