சற்று முன்

அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |    உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’   |    அக்டோபர் 18 முதல் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி   |    பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா   |    'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |   

சினிமா செய்திகள்

பெப்சி வேலைநிறுத்தம் - விக்னேஷ் சிவன் உருக்கம்
Updated on : 01 September 2017

பெப்சி வேலைநிறுத்தத்தால் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.



 



இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், "நம் உடலின் ஒவ்வொரு அணுவும் வியர்வை சிந்த தயாராக இருக்கும்போது நாம் வேலை செய்யாமல் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. சினிமாவில் காதல், நட்பு, நேர்மறை எண்ணம், ஒற்றுமை என பல விஷயங்களைப் பேசுகிறோம். ஆனால் நாம் பேசுவதை பின்பற்றுவதில்லை.



 



முக்கியமான பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை இங்கு தேடுவதில்லை. மகிழ்ச்சியாக, ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்துக்குள் என்ன சாபம் நுழைந்து, என்ன ஆனது எனத் தெரியவில்லை.



 



சமரச புரிதல், கலந்துரையாடலுடன் இந்த உலகில் எதற்கும் தீர்வு காணலாம். தலைமையில் இருப்பவர்கள் முடிவெடுக்க இதுதான் சரியான நேரம். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, ஒருவரை பற்றி ஒருவர் புகார் சொல்வதை விட, ஒரு அறையில், நல்ல மனநிலையில் ஒன்றாக உட்கார்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கலாம். குடும்பத்துக்குள் இந்த எதிர்மறை விஷயங்களை நிறுத்துங்கள். தயவு செய்து ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள்" என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா