சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

விருதுகள் பல பெற்றும் மக்கள் ஆதரவை பெற காத்திருக்கும் பெட்டி
Updated on : 17 March 2016

தமிழ் சினிமாவின் நல்ல படங்கள் உலக திரைப்பட விருதுகளோடு தனக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே ரேடியோ பெட்டி திரைப்படம் இருக்கிறது. இன்னும் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் பல்வேறு உலக திரைகளில் அரங்கேறி விருதுகளை வென்றுள்ளது இந்த திரைப்படம்.



 





பிற உலக திரைப்படங்களை போன்று தரமான படங்களை தமிழ் படைப்பாளிகள் உருவாக்குவார்கள் என்பது சமீப காலமாக நிரூபணம் ஆகிவருகின்றன. இந்த திரைப்படங்களில் சிறு சிறு மாற்றுக் கருத்துக்களை பலர் வைத்தாலும், தற்போதைய தமிழ் சினிமாவில் இருந்து விலகி மாற்றம் நிகழ்த்தியுள்ள இதுப்போன்ற படங்களை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்.



 





10 வருடங்களுக்கு ஒரு படம் என்று எப்போதோ நிகழும் ஒரு அபூர்வமாக தமிழில் மாற்று சினிமாக்கள் வெளிவந்த காலம் கடந்து, சமீபத்தில் பல படங்கள் தமிழில் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அப்படி வரும் படங்கள் விருதுகளை பெரும், பாராட்டுக்களை வாங்கி குவிக்கும் ஆனால் வணிக வெற்றி என்பது அவைகளுக்கு கிடையாது என்றிருந்த நிலை தற்போது பெரிதும் மாறியிருக்கிறது.



 





சமீபத்தில் வெளியான காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை, இறுதிச் சுற்று போன்ற படங்கள் இதற்கு சிறந்த உதாரணம். தற்கால தமிழ் சினிமாவின் நல்ல படங்களை மலர் தூவி வரவேற்கவும் இங்கு ரசிகர்கள் காத்திருக்கத்தான் செய்கின்றனர்.



 





அதுமட்டுமின்றி விசாரணை, குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களை முன்வைத்து பல்வேறு சமூக அரசியல் விவாதங்களும், கலந்துரையாடலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டது இந்த படங்களுக்கு கிடைத்த விருதுகளை விடவும் மேன்மையான ஒரு மாற்றம் தான்.



 





இந்த மாற்று சினிமாக்களின் தொடர் சங்கிலியில் இப்போது இணைக்கப்பட்டு நமது அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் ஒரு திரைப்படம் தான் ரேடியோ பெட்டி.



 





பூசான் திரைப்பட விருது, இந்தியன் பனோரமா விருது, சென்னை திரைப்பட விழா விருது என பல்வேறு தளங்களில் இது தனக்கான அடையாளத்தை பெற்றுக்கொண்டது. ஆனாலும் இவைகளைவிட இப்படத்திற்கு தேவைப்படும் உயரிய பதக்கம் நம் மக்களின் ஆதரவாகத்தான் இருக்க முடியும்.



 





தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு எப்போது வேண்டுமென்றாலும் ரேடியோ பெட்டி திறந்துவிடப்படலாம். எதற்காக அவர்கள் காத்திருக்கிறார்களோ. ஆனால் நாம் காத்திருப்போம் மீண்டும் ஒரு மாற்று சினிமாவை கொண்டாட.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா