சற்று முன்

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |   

சினிமா செய்திகள்

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Updated on : 19 March 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.



 



தமிழில் மறுமலர்ச்சி படத்தில் அறிமுகமாகி ஜெமினி திரைப்படம் மூலம்  கவனம் பெற்ற கலாபவன் மணி, சமீபத்தில் வெளியான பாபநாசம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



தனது திரையுலக வாழ்கையை மலையாள சினிமாவில் தொடங்கிய கலாபவன் மணி, அக்‌ஷரம் என்ற மலையாள  படம் மூலம் அறிமுகமானார். 



 



இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராக இருந்து, கலாபவன் எனும் கலை பயிற்சி மையத்தின் மூலம் பலகுரல் பேசும் கலைஞரானார். பின்னர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், தனது திறமையினால் வளர்ச்சி பெற்றார்.



 



இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.



 



ஆனால் அவரது இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.



 



எனவே, கலாபவன் மணியின் இறப்பு கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா