சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Updated on : 21 March 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது.



 



கோலாகலமாக நடக்க வேண்டிய இந்த இசை வெளியீட்டு விழா இன்று பெரும் அமளியில் நடந்தது. திரையரங்கின் உள்ளே விழா விமர்சையாக நடந்தாலும் திரையரங்கின் வெளியே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அடிதடியுடன் கூடிய பரபரப்பு சம்பவங்கள் பல நடந்தன. 



 



படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்னவோ மிகவும் பாதுகாப்பாக அரங்கின் உள்ளே சென்றாலும், படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள், மீனா மற்றும் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர், சோபா சந்திரசேகர் உட்பட பலர் கூட்ட நெரிசலில் மாட்டி அவதிப்பட்டு உள்ளே வந்தனர்.



 





 



மேலும் பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல மிகவும் கெடுபிடியாக இருந்தது. தெருக்கு தெரு பேனர் மூலமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் விழாவில் மக்கள் அலைமோதி பெரும் கலவரமே நடைபெற்றது. 



 



இதில் பாடிகாட்டுகளால் (பவுன்சர்கள்) கட்டுபடுத்த முடியாத பட்சத்தில் காவல்துறையினர் வந்து கூட்டத்தை விலக்க முயற்சி செய்தனர். இதனால் மக்கள் சிலர் அடி உதைபட்டு அவதிப்பட்டு சென்றனர். 



 



பாடிகாட்களாலும் சமாளிக்க முடியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவே களத்தில் இறங்கி கூட்டத்தை விளக்கி கொண்டிருந்தார். கோடிகணக்கான பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஏன் இந்த கஷ்டம். அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்ய பொறுப்பை ஒப்படைத்த நபர் இதை ஒழுங்காக செய்திருந்தால் ஏன் இந்த அவலம்.



 



விழாவை சரியாக ஒருங்கிணைப்பு செய்யாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் சரியாக செய்யாததே இதற்க்கு காரணம். 



 



இந்த விழாவை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலால் வெளியில் உள்ள மற்ற மக்களும் அவதிக்குள்ளாயினர். இதே இந்த விழாவை ஊருக்கு வெளியில் உள்ள ஏதேனும் இடத்தில ஏற்பாடு செய்திருந்தால் இந்த பிரச்சினைகள் நேர்ந்திருக்காது.



 



இனி வரும் காலங்களில் இது போன்ற விழாக்கள் நடத்துபவர்கள் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க கவனம் செலுத்துவார்களா...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா