சற்று முன்

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு
Updated on : 21 March 2016

மூத்த சினிமா தகவல் சேகரிப்பாளர் மற்றும் ஆவண காப்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார். பழம்பெரும் தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாக்கள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.



 



தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் நியூஸ் ஆனந்தன் . அதனை தொடர்ந்து ஏராளமான பத்திரிக்கைகளில் தான் அறிந்த சினிமா குறித்த செய்திகளை அவர் எழுதினார்.



 



அதுமட்டுமின்றி தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து, “சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு”என்ற  நூலை பிலிம் நியூஸ் ஆனந்தன் படைத்தார். அவர் இந்த நூலை வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. மேலும், பிலிம் நியூஸ் என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார்.



 



இரண்டு வாரங்களுக்கு முன்னர் மறைந்த, இந்திய சினிமாவின் திரைப்பட ஆவணக் காப்பகத்தை தோற்றுவித்த  பி.கே. நாயர் அவர்களை, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் லெனின் விருது நிகழ்ச்சியில் சந்தித்த பிலிம் நியூஸ் ஆனந்தன், தனது புத்தகத்தை அவருக்கு அளித்து மகிழ்ந்தார்.

 



இந்தியா சினிமா போற்றும் பி.கே. நாயருக்கு இணையாக, தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாக பிலிம் நியூஸ் ஆனந்தன் திகழ்ந்தார். 1921-ஆம் ஆண்டு பிறந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், வயது முதிர்வு காரணமாக இன்று மறைந்தார். அவரது இந்த இறப்பு செய்தி தமிழ் சினிமாவின் பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா