சற்று முன்
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியின் மகிழ்ச்சிக்கு காரணம்
Updated on : 28 March 2016
விசாரணை திரைப்படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியில் உள்ள சமுத்திரக்கனி பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து
எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி.
63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரனை படத்திற்க்காக கிடைத்துள்ளது.
எனக்கு இவ்விருது கிடைக்க உருதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், விசாரனை படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.
விசாரனை படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு விசாரனை படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விசாரனை படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்.
எனது அடுத்த படைப்பான “அப்பா” விரைவில் வெளிவரவுள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு,
சமுத்திரகனி
சமீபத்திய செய்திகள்
'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!
பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ’JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.
ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த 'ஹே சினாமிகா' படம் மற்றும் 'ராமன் தேடிய சீதை', 'சாருலதா', ’அலோன்', உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ’கோலி சோடா- தி ரைசிங்' வெப் தொடரையும் தயாரித்திருக்கிறது.
ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்
'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி' & 'வீனஸ் என்டர்டெய்னர்ஸ்' சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இணைத்தயாரிப்பாளர் நவீன், "இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்" என்றார்.
தயாரிப்பாளர் சமீர், "ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!".
பாடலாசிரியர் மதன் கார்க்கி, " தனித்துவமான கதைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் குறைவு. எந்த விஷயம் எடுத்தாலும் அதை மட்டும் தனித்துவமாக காட்டுவதில் மெனக்கெடுவார். இந்தப் படத்திலும் அந்த வித்தியாசமான கதைக்களம் இருக்கும். அவருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகர் சண்முகப்பாண்டியன், "உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். 'Ui' படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்”.
நடிகை ரேஷ்மா, “முதல் முறையாக சென்னைக்கு என் படத்தின் புரோமோஷனுக்காக வந்திருப்பது மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் பற்றியும் படம் பற்றியும் பெரிதாக நான் பேச முடியாது. ஆனால், படம் நிச்சயம் உங்களுக்கு பல ஆச்சரியங்களைக் கொடுக்கும்” என்றார்.
நடிகர் உபேந்திரா, “டிரெய்லரில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் ஒரு ஃப்ரூட் சாலட் போல! இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இதில் நீங்கள் பார்த்து என்னிடம் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்
திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார்.
திரைப்படத்தின் இசையை வெளியிட்டு விட்டு, விழாவில் அவர் பேசும் போது,
"இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன்.
திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது.
இந்தப் படத்தில் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களிலிருந்து தொடங்குவோம்.
நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன்.
நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன .அவை அனைத்தையுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன .ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை.
நான் உங்களுக்குச் சில சம்பவங்களைக் கூற விரும்புகிறேன். மசூரியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு தொடக்க விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நான் ஒரு மனிதருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, விலங்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு பெரிய சாலை.அது அவரது வீட்டிற்கு சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும். அவரது நாய் தனது இணையுடன் அங்கே நின்று கொண்டிருந்தது. இதற்கு முன் நான் அவற்றைச் சந்தித்ததே இல்லை. அவை இப்போதுதான் எனக்குப் பாதுகாப்பாக என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தன. நான் அவரிடம் சொன்னேன், "உங்கள் நாய் காலையில் தனது பாதத்தை காயப்படுத்தியதாகக் கூறுகிறது, அதற்கு மிகவும் வலிக்கிறது,யாரையும் அதைத் தொட அனுமதிக்கவில்லை" என்று.
அந்த மனிதர், "இந்த முட்டாள்தனத்தை நான் நம்பவில்லை "என்றார்.
நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றோம், அவர் தனது மனைவியிடம் பேசினார். அவரது மனைவி சொன்னார், "உங்களுக்குத் தெரியும், உங்கள் நாய் காலையில் இருந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது.காலில் காயம்பட்டு இருந்தது கட்டுப் போடக் கூட விடவில்லை" என்றார்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான அனுபவங்கள் எனக்கு உண்டு.
மரியா என்று ஒரு பெண்மணி இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார்.அவர் ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார்.அவரால் விலங்குகளுடன் பேச முடியும், பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும் .இதைச் சொல்வதற்காக இந்தியா வந்திருந்தார்.
நான் அவரை எனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அது இந்தியாவின் முதல் விலங்கு மருத்துவமனைகளில் ஒன்று.ஒரு பசு அவர் அருகில் வந்தது, பசுவின் தலையில் கையை வைத்தார். பின்னர் அவர் என்னிடம் சொன்னார், "பசு நன்றி சொன்னது "என்று. "அது ஒரு விபத்தில் சிக்கியபோது நீங்கள் அதனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள். அது இப்போது நன்றாக இருக்கிறது. ஆனால் அதன் தலையில் தாக்கப்பட்டதால், அதற்கு இன்னும் தலைவலி வருகிறதாம். ஏதாவது மருந்து இருக்கிறதா ?"என்று கேட்டார்.
பின்னர் ஆபரேஷன் மேஜையில் படுத்திருந்த ஒரு நாயிடம் சென்றோம். அதன் கால்கள் அனைத்தும் உடைந்துவிட்டன.
நாய் அந்தப் பெண்ணிடம் இன்று காலை, மிஸஸ் காந்தி மருத்துவரிடம், வலி இருப்பதால் அதனால் நிற்க முடியாது ,அதைத் தூங்க வைப்போம் என்றாராம்
அதற்கு டாக்டர், முடியாது என்றாராம்.இதையெல்லாம் அந்த நாயிடமிருந்து புரிந்து கொண்டு அவர் கூறினார்.
நான் முதல் முதலில் தேர்தலில் நின்ற போது, நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றேன்.,அங்கே ஒரு மோசமான வாசனை வந்தது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஏதேனும் ரசாயனங்கள் உள்ளதா, கழிவுநீர் உள்ளதா, வேறு ஏதாவது இருக்கிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன். மேடையின் அருகே ஒரு கழுதை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அதன் உடல் முழுவதும் சீழ் நிரம்பி,அழுகிக் கொண்டிருந்தது போல் ஒரு நிலை.எனவே நான் கூட்டத்தை விட்டு வெளியேறினேன்.அதை வீட்டிற்குக் கொண்டு சென்றேன், மருத்துவரை அழைத்தேன், சீழைத் துடைத்து,ஆண்டிபயாட்டிக் கொடுத்தோம்.மெல்ல மெல்ல சரியானது.பிறகு அது மருத்துவரைச் சந்திக்க விரும்பவில்லை. மருத்துவரைப் பார்த்தால் மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ளும்.அங்கிருந்து வெளியே செல்ல விரும்பியது."தயவுசெய்து போங்கள் "என்று கொடுத்த இரைகளை எட்டி உதைத்தது.ஒரு நாள் இரவு, அது முற்றிலும் குணமான தருணத்தில் அது பாடியது.அந்த இரவு என் வாழ்நாளில் மறக்க முடியாத இரவு என்று சொல்வேன். அந்தக் கழுதை வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து பாடுவது போல் ஒரு பாட்டு பாடியது .அது ஒரு அருமையான இசை போல் எனக்கு இருந்தது. அது இசைத்த பாடல் "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி" என்று நட்சத்திரங்களைப் பார்த்து கூறுவது போல் இருந்தது.
விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது , அது நம்முடையதாக உணர வேண்டும்.நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.
ஒருமுறை நான் எனது தொகுதியில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய நீண்ட கறுப்பு பாம்பு கடந்து கொண்டிருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடராமல் நிறுத்தி, காத்திருந்தோம், பாம்பு கடந்து சென்றது. பாம்புகளால் நன்றாகப் பார்க்க முடியாது. அவற்றால் கேட்கவே முடியாது. ஒரு இரவில், நான் தூங்கச் சென்றபோது, ஒரு பாம்பு வந்து என் படுக்கையின் கீழ் இரவு முழுவதும் இருந்து விட்டு காலையில் போய்விட்டது. அது உங்களைப் போலவே தூங்க வந்ததைப் போல இருந்தது. இப்படி என் வாழ்க்கையில் நிறைய உண்டு.
நீங்கள், நான், அது, உங்கள் காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
கோழிகளுக்கு ஒரு முழுமையான அகராதி உண்டு.அவற்றுக்கான, ஒரு மொழி உள்ளது. கோழிகள், திருமணம் செய்து கொள்கின்றன.பிள்ளைகள் குடும்பம் என்று ஒன்று உண்டு.ஆண் கோழிகளுக்கு மனைவியைப் போல பெண் தோழிகளும் உண்டு. மனைவிக்கும் பெண் தோழிக்கும் சண்டை வருவதுண்டு. பொய்கள் சொல்வதும் உண்டு.
இந்தப் படம் நாயின் உரிமை வழக்கு பற்றிப் பேசுகிறது.
நான் எப்போதும் பார்க்கிற குழந்தைகளிடம் சொல்வது போல் உங்களுக்கும் சொல்கிறேன்.மும்பையில் ஒவ்வொரு நாளும் நாய்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதை யாரும் நிறுத்த முடியாது.சாலைகளில் அவற்றின் மீது வாகனங்கள் மோதி பல நாய்கள் காயம்படுகின்றன, பலவும் இறக்கின்றன.நாயின் மீது வண்டி ஏற்றிய மனிதருக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அது பெரிய விஷயம் இல்லை என்றதுடன் அந்த வழக்கைக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக நீதிபதி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது நான் இதுவரை கண்டிராத மிகவும் பயங்கரமான தீர்ப்பாகும்.
நான் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இதுபோல ஏராளமான விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் பிரச்சினைகள் வருகின்றன.
இந்தப் படம் அந்த நீதிபதிக்கு மட்டும் காட்டப்படாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.
எஸ். ஏ . சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்கு நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும்.
உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல ,கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம் .இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி"இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.
இந்தப் பட விழாவில் இயக்குநர்கள் எஸ் .ஏ. சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன்,எம். ராஜேஷ் பொன்ராம், நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், விஜய் ஆண்டனி,தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விமலா பிரிட்டோ ,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , தொழிலதிபர் சுந்தர், தயாரிப்பாளர் விக்கி,படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் கலந்து கொண்டது.
2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!
'வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
ரஜினிகாந்த் - அஜித் - விஜய் - விக்ரம் - சூர்யா - தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் - ரவி தேஜா - சித்தார்த் - கார்த்தி - ஆர்யா- விஷால் - ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் - துல்கர் சல்மான் - ராம் பொத்தனேனி - அதர்வா- ராகவா லாரன்ஸ் - அருண் விஜய் - பரத் - பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இதற்காக இப்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.எல். விஜய், புஷ்கர்- காயத்ரி, பி. வாசு, வெற்றி மாறன், செல்வராகவன், தனுஷ் - சுதா கொங்காரா - பாரதிராஜா, அட்லீ, ஹரி, சிம்புதேவன், பாலா, சேரன், சமுத்திரக்கனி, முத்தையா , ஆதிக் ரவிச்சந்திரன், மணிகண்டன், சாம் ஆண்டன், பா. ரஞ்சித், எம். ராஜேஷ், மித்ரன் ஆர் ஜவஹர் , தங்கர் பச்சன், ஏ. கருணாகரன், வெங்கி அட்லூரி , அருண் மாதேஸ்வரன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்கள் K. பாலசந்தர், கலைப்புலி எஸ். தாணு, ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சுரேஷ் பாலாஜி, பிரகாஷ்ராஜ், ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அருண் பாண்டியன், கருணா மூர்த்தி, புஷ்பா கந்தசாமி, ஆர். ரவீந்திரன், ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஆர். பிரபு, டி. சிவா, எஸ். மைக்கேல் ராயப்பன், டி. ஜி. தியாகராஜன்- பி வி எஸ் என் பிரசாத், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நாக வம்சி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி - நவீன், அபிஷேக் அகர்வால், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆர். சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர். சரத்குமார்- திருமதி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் & நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இசை கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில். அவரது தயாரிப்பில் உருவான 'அமரன்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். 'சூரரைப் போற்று' எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்கள் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். சில பேர் மட்டும் தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா சார். அவர் ஒரு முறை சிவாஜி சாரிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா? எனக்கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா சார் நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தாருங்கள் நன்றி.
நடிகை வடிவுக்கரசி பேசியதாவது…
இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள் நன்றி.
இயக்குநர் சரண் பேசியதாவது…
இந்தப்படத்தில் மிக அருமையான கதை இருக்கிறது. இந்தப்படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். நான் என்னுடைய ஒரு படத்தில் மிக அமைதியான கேடக்டருக்கு சமுத்திரகனி என்று தான் பெயர் வைத்தேன். காலம் பாருங்கள். இப்போது அவர் பிரபலமான வில்லன் ஆகிவிட்டார். இந்தப்படத்திலும் அவர் தான் வில்லன். படம் பாருங்கள் புரியும். இந்தப்படம் பார்த்து சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம். ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கிறார் நந்தா பெரியசாமி. அதை விட இந்தப்படத்தை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திருக்கிறார். பாராதிராஜா சாரிலிருந்து குட்டி குட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட அழகாகச் செய்துள்ளனர். முழு திருப்தி தந்த படம். கண்டிப்பாக இப்படம் மக்களின் மனங்களை வெல்லும். நன்றி
நடிகை அனன்யா பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக உள்ளது. இந்தப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா சார் இந்தக்கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன விசயங்கள் கூடச் சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது. சமுத்திரகனி சார் தான் என்னைத் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். இயக்குநர் மிக அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். எல்லோரும் சொல்வது மாதிரி மிக நேர்மையான படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் இயக்குநர் தம்பி ராமைய்யா பேசியதாவது….
நான் பேசுவதை விட, இங்கு படம் பார்த்தவர்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி நந்தாவிடம் கதையைத் தோன்றியவுடன் எடுத்து விடு. இம்மாதிரி கதை கிடைக்காது எனச் சொல்வேன். தம்பி லிங்குசாமிக்கு எப்படி ஆனந்தம் படம் அமைந்ததோ அது போல நந்தா பெரியசாமிக்கு இந்தப்படம் இருக்கும். சமுத்திரகனி நடந்து கொள்வது எல்லாம் ஆரம்பத்தில் பார்த்தால் நல்லவனாக நடிக்கிறாரோ என நினைப்பேன். ஆனால் ஒருவனால் தொடர்ந்து நடிக்க முடியாதே அவன் இயல்பிலேயே நல்ல மனதுக்காரன். இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறான். இது அற்புதமான படம். சமுத்திரகனியை நாயகனாக வைத்து எடுக்கும் ஒரு நல்ல படைப்புக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அற்புதமான படைப்பாக மக்களைச் சென்றடையும் நன்றி.
தயாரிப்பாளர் ரவிக்குமார் பேசியதாவது…
ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்து இப்படம் எடுத்துள்ளேன். என் நண்பன் ராஜா செந்தில் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தி இப்படத்தைப் பற்றிச் சொன்னார். இக்கதை கேட்ட போது நானும் அழுது விட்டேன். அன்றே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்தவர்கள் படம் பற்றிச் சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். டிசம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…
சென்னைக்கு வந்த புதிதில், நான் தங்கியிருந்த அறையில், என் நண்பனாக உடனிருந்தவர் நந்தா. வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் என எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அப்போதே என்னை ஆதரித்தவர் நந்தா. ஆனந்தம் படம் எழுதிய போது முழுக்க முழுக்க உடனிருந்தவர் நந்தா. சிலருக்கு முதல் படத்திலேயே வெற்றி பெரிதாக அமைந்து விடும், சிலருக்கு லேட்டாகும். ஆனால் தொடர்ந்து போராடுவது இருக்கிறது இல்லையா அது மிகப்பெரிய விசயம். அதை நந்தா சாதித்துள்ளார். எல்லோரும் படம் பார்த்து மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்ன போதும் உண்மையாகச் சொல்கிறார்களா? நட்புக்காகச் சொல்கிறார்களா? எனத் தயங்கினேன். ஆனால் எல்லோரும் மனதார பாராட்டினார்கள். உண்மையான நேர்மையான படைப்பு. சமுத்திரகனி அற்புதமான நடிகன். விசாரணை படத்தில் அப்படி நடித்திருப்பார். கேமரா வைத்தால் 100 சதவீதம் கதாபாத்திரமாக மாறிவிடுவார். அனன்யா, வடிவுக்கரசி அம்மா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா செந்தில் என் படத்தில் நடிப்பு வாய்ப்பு கேட்டவர், வாரியர் படத்தில் சின்ன ரோல் செய்தார். இப்படத்தைத் தயாரித்துள்ளார். நந்தா குடும்பமே இங்கு வந்துள்ளது, இது சரியான தருணம் இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். எல்லோரும் இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியதாவது…
இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன் அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் சார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரகனி அண்ணன் கதை கேட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது. அமீர் அண்ணன் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. ஒரு நல்ல தமிழ்ப்படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் நன்றி.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…,
மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். அப்பாவுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள். தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பது தான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும் கூட, அப்படித்தான் ஆரம்பித்தது. சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர் திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னை விட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப்பார்த்துப் பண்பட்ட நடிகனாகிட்டே என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும் ஆனால் இப்போது மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திருமாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். இப்படத்தை வெல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை. நன்றி.
இயக்குநர் அமீர் பேசியதாவது…
எனக்கு நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும். அவரது ஒரு கல்லூரியின் கதை படம் வருவதற்கு முன்னாலே அந்தப்படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. அப்போதே என் கம்பெனிக்கு படம் செய்யுங்கள் என 2 லட்சம் தந்தேன். யோகி படம் நான் செய்யும் போது அதை வேண்டாம் என சொன்னது நந்தா தான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். மாத்தி யோசி என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். சமுத்திரகனியிடம் இதைப்பார்த்துள்ளேன். அதே மாதிரி நந்தாவிடம் பார்த்தேன். இந்தப்படம் பார்த்தேன் இரு காட்சியில் உண்மையில் கண்கலங்கி விட்டேன். படம் வெற்றி பெறுகிறது இல்லை என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம் அதை இந்தப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை சொல்லித்தருவது தான் இந்தப்படம். கமல் சாரையும், சிவாஜி சாரையும் எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி, இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசத்தியுள்ளார். பாராதிராஜா சார் சின்ன பாத்திரம் என்றாலும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. சமுத்திரகனி இந்த கதாப்பாத்திரத்தை இவனை சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். நன்றி.
ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்...
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கும் படம் "இரவின் விழிகள்".
மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட சொந்த ஒரு காரணம் இருக்கும்.
இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்கிற வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக ‘இரவின் விழிகள்’ படம் தயாராகி வருகிறது
இந்த படத்திற்கு ஏஎம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர் ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.
இரவின் விழிகள் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் பாண்டிச்சேரி, மரக்காணம் அதை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் 'மாமன்'
Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.
ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!
என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்..
டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் திரையரங்குகளில் பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் கொடுத்த அனுபவம், அவர்களை நேர்மறையாக விமர்சனம் செய்ய வைத்தது.. பார்த்தவர்கள் கொண்டாடியதுடன், குடும்பத்துடன் பார்க்க இத் திரைப்படம் நல்ல தேர்வு என ஆதரவு தெரிவித்தனர். பெரிய அளவில் ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் இத்திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகவில்லை என்றாலும், தற்பொழுது தரமான திரைப்படம் என்னும் மதிப்புடன் வார இறுதி நாட்களில் முன்பதிவை மும்மடங்கு பெருக்கி இருக்கிறது.
குறிப்பாக, ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியான திரைப்படங்கள் வெளியாகி சில காலம் ஆகிவிட்டது. அந்தக் குறையை நீக்கி இருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.. திரையரங்கில் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து, பார்த்து, ரசித்து, சிரித்து, மகிழ்ச்சியுடன் திரையரங்கில் இருந்து வெளியேற இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி அந்த குடும்பங்கள் பகிரும் வார்த்தைகள் தான் மிஸ் யூ திரைப்படத்தின் வெற்றி ஆக மாறி இருக்கிறது. வித்தியாசமான காதல் கதை, அதற்கேற்ற திரைக்கதை, சிறப்பான நகைச்சுவை, ஆழமான வசனங்கள், அருமையான இசை என எல்லா அம்சமும் மிஸ் யூ படத்தை கொண்டாடும் காரணிகளாக மாறியுள்ளன.
மிஸ் யூ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 மைல்ஸ் பெர் செகண்ட், பொதுமக்களின் நேர்மறையான விமர்சனங்களால் ஊக்கம் பெற்று, நம்பிக்கையுடன் மிஸ் யூ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த முயற்சி வரும் நாட்களில் மேலும் அதிகமாக, திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் எனும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
திரைத்துறை பின்னணியில் இயங்கி வருபவர்கள் "மிஸ் யூ" படம் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக, திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை ஈர்க்கும் என கணித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் குடும்ப உறவுகளை மைப்படுத்திய, ஒரு ஃபீல் குட் காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது என்றால் அது மிஸ் யூ மட்டுமே. அதிலும், நகைச்சுவை, காதல், மனத்தைத் தொடும் காட்சியமைப்புகள் மட்டுமல்லாமல் நல்ல கதையம்சத்தையும் கொண்டுள்ளது மிஸ் யூ படம். அப்படிப்பட்ட ஒரு நல்ல படைப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் அது எப்படிப்பட்ட வெற்றியை கொடுக்கும் என்பதை மிஸ் யூ திரைப்படம் உணர்த்தியுள்ளது.
தற்போது வெளியான படங்களில் ஒரு ஆச்சரியத்தக்க வெற்றியை தனதாக்கியிருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.
வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் '7 ஜி ரெயின்போ காலனி ', 'ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள' ( தமிழில் - 'யாரடி நீ மோகினி') ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 'மெண்டல் மனதில்' உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. 'மெண்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அனைத்தும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக, முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா