சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

கே.வி.மகாதேவன் நூற்றாண்டு விழா
Updated on : 10 May 2018

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா 

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!



 





திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா சமீபத்தில்   சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் நடை  பெற்றது.பிரபல இயக்குநர் முக்தா சீனிவாசன் அவர்களின் ஆலோசனையின்படி இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள்.



 



 



விழாவில் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா , வாணி ஜெயராம், டி.எல்.மகாராஜன் , கவிஞர்கள் பூவை. செங்குட்டுவன் , பிறை சூடன் , நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் , மலேசியா டத்தோ வசீர் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். .விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பேசும் போது 



 





இவ்விழாவை நடத்தும் எம்.எஸ்.வி. யின் இசை ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மாமா கே.வி.மகாதேவன் அவர்கள் பெரிய இசைமேதை மட்டுமல்ல மிகச் சிறந்த மனித நேயம் மிக்கவராக இருந்தார். அவர் கலைஞர்களின் மனம் கோணாமல் வேலை வாங்கினார் .அவருடன் ஈருடல் ஓர் இதயம் போலிருந்தவர் புகழேந்தி அவர்கள் .எனக்கு ஸ்வர ஞானம் கிடையாது. கேள்வி ஞானம் மட்டும் தான் .நான் எல்லாம் சங்கராபரணம் படத்தில் பாடினேன் என்றால் அந்த ஞானம் ,அது அவர் போட்ட பிச்சை என்பேன். எனக்கு எது வருமோ அதைப் பாடக் கொடுப்பார்.அவர் கவிஞர்களை மதிப்பவர். வார்த்தைகள் எழுத வைத்து மெட்டு போட்டவர்.பாட்டுக்குத்தான் மெட்டு என்பார்.



 



 





நான் சொல்கிறேன் அவர் சொன்னது சரிதான். ஒரு பாட்டுக்கு பெயரே அதன் வார்த்தைகள் தான், வார்த்தை இல்லாமல் பாட்டு ஏதய்யா? வார்த்தை இல்லாமல் வெறும் இசை பாடலாகாது. வெறும் ததா தா…. என்று  வரிகள் இல்லாமல்  வெறும் ராகம் பாட முடியுமா?



 



 





சிலரைப்  பெரிய இசை மேதைகள் என்பார்கள். யாரையும் மதிக்க மாட்டார்கள். அருகில் யாரையும் சேர்க்க மாட்டார்கள் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் மாமா கே.வி.எம். சிறந்த மனிதாபிமானி. பல பேருக்கு வாழ்வு கொடுத்தவர். நான் எடுப்பார் கைப்பிள்ளை .என்னைப் பலரும் அன்பு காட்டி வளர்த்து இருக்கிறார்கள். அவர்களில் கே.வி.எம். முக்கியமானவர். உரிமையோடு என்னை அன்புடன் நடத்தி வளர்த்தவர். ” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.விழாவில் கே.வி.மகாதேவன் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னதாக சத்யாவின் கீதாஞ்சலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



 





மேடையில் இசைக்குழுவினர்களோடு பி.சுசிலா,எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் மூவரும் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாடிய....அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ""ஆயிரம்..நிலவே ..வா...,""சங்கராபரணம் படத்திலிருந்து ""சங்கரா ....,"மானஸ சன்சரே...." இதயக்கமலம் படத்திலிருந்து :உன்னைக்காணாத ..கண்ணும்..கண்ணல்ல..", பல்லாண்டு வாழ்க படத்திலிருந்து "இன்று  சொர்க்கத்தில் திறப்பு விழா, போன்ற பாடல்களைப்பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். 



 





விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் முக்தா ரவியும், எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர் மன்றத் தலைவர் விஜய கிருஷ்ணனும் வர வேற்றார்கள் .



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா