சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

இந்தியாவின் சூப்பர் ஸ்டார்க்கு மகனா! ஷாக்கான நடிகர்
Updated on : 04 June 2018

செல்வராகவன் மூலம் தமிழில் அறிமுகம்படுத்தப்பட்டவர் நித்தீஷ் வீரா. இவர் "வெண்ணிலா கபடி குழு" படத்தில் வீரா கேரக்டர் மூலம் மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர். தங்கர்பச்சான் இயக்கத்தில் "ஒன்பது ரூபாய் நோட்டு". யுவனின் "சிந்தனை செய்", ஹரிதாஸ், "மாவீரன் கிட்டு", "ராணி", "நேற்று இன்று" இவர் நடித்த அத்தனை படங்களிலும் நித்தீஷ் வீரா கேரக்டர் பேசப்படும் கேரக்டர்களாகவே அமைந்தன. 



 



இவர் ஹீரோவாக நடித்த "பற", "கவாத்து" என ரெண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. "வெண்ணிலா கபடி குழு 2" விலும் பேசப்படும் கேரக்டர் நடித்துள்ளார்.



 



"காலா" படத்தில் 40 நாட்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மகனாக நடித்துள்ளார். "காலா" படத்தின் சூட்டிங் நாட்களை பற்றி கேட்டால் அது மிராக்கிள் நாட்கள் என்கிறார்.



 



ரஞ்சித்தை ரொம்ப நாட்களாக ஃபாலோ பண்றேன் சூட்டிங் போறதுக்கு முன்னாடி வொர்க் ஷாப் நடத்தினார் இதில் 20 நாட்கள் கலந்து கொண்டேன். வொர்க் ஷாப்பே சூட்டிங் போல நடக்கும். "காலா" படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே வொர்க் ஷாப் செய்த பின்னரே படத்தில் நடிக்க வைத்தார்.



 



"காலா" ஃபர்ஸ்ட்டே சூட்டிங் எனக்கு என்ன கேரக்டர்னே தெரியல. சூட்டிங் வந்த ரஞ்சித் நீ தான் ரஜினியோட மூத்த மகன்னு சொன்னார். அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிடுச்சு. இந்தியாவின் சூப்பர் ஸ்டார்க்கு மகனானு.



 



சூட்டிங் வந்த சூப்பர் ஸ்டார் ஹாய் ஹாய் எப்படி இருக்கீங்க. இப்போ என்னென்ன படம் போயிட்டு இருக்குனு தோளில் கை வச்சு கேட்டார். இப்போ வரைக்கும் மனச விட்டு அகலமாட்டிங்குது. நடித்த நாப்பது நாளில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, எளிமை, ஷார்ப்னஸ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டேன். சூப்பர் ஸ்டார் என்னனா நானே படேகர் நடிப்பதை வியந்து பார்ப்பார்.



 



லாஸ்ட் செட்யூல், லாஸ்ட் டே, காலைல ஏழு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்த அவர், அடுத்த நாள் காலை ஆறு மணி வரை புகையிலும், புழுதியிலும் உட்கார்ந்தே இருந்தார். அதனால் தான் இன்னைக்கும் அவர் சூப்பர் ஸ்டார்.



 



இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத படமான காலாவில் முக்கியமான பாத்திரம் ஏற்றிருக்கும் நித்தீஷ் வீரா, எனக்கு ஸ்கோப் இருக்கும் எந்த படத்திலும் நடிக்க தயார் என்கிறார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா