சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

சசிகுமாரின் மகிழ்ச்சியும் நன்றியும்!
Updated on : 29 March 2016

63-வது தேசிய விருதுகளில் தாரை தப்பட்டை திரைப்படத்தின் பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர்- இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸின் படத்திற்கு மூன்றாவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது.



 





இந்நிலையில் இதுதொடர்பாக சசிகுமார் விடுத்துள்ள அறிக்கையில், "மகிழ்ச்சிப் பெருக்கின் பகிர்தலுக்காக இந்தக் கடிதம். எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.



 





இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக 'தாரை தப்பட்டை' அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இசைஞானி ராஜா சாரை இந்திய தேசமே கொண்டாடும் சூழலில் ரசிகர்களோடு ரசிகர்களாக நாங்களும் இந்த மகிழ்வில் கலக்கிறோம்; இசைஞானியைக் கொண்டாடுகிறோம். தாரை தப்பட்டை படத்தின் இயக்குநரான பாலா அண்ணனை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவரால் தான் அனைத்தும் சாத்தியமானது என்பது ஒருபோதும் மறுப்பதற்கில்லை.



 





'பசங்க', 'தலைமுறைகள்' வரிசையில் எங்களின் 'தாரை தப்பட்டை' படமும் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரிய நம்பிக்கையாக  அமைந்திருக்கிறது. இதற்காக உழைத்த 'தாரை தப்பட்டை' படக் குழுவினர் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.



 



சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் பாசத்துக்குரிய சகோ சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய விருதுகளைக் குவித்திருக்கும் விசாரணை படக் குழுவினருக்கும், இறுதிச்சுற்று குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.



 



தமிழ் திரையுலகுக்கு கிடைத்திருக்கும் தேசிய அங்கீகாரங்களால் மகிழ்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா