சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

கதையை கேட்காமலே நடித்த தினேஷ்
Updated on : 02 August 2018

"அண்ணனுக்கு ஜே " திரைப்படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.



இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில் சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

.அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார்.விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார்.எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.



பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தினேஷ் பேசியவை "இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மஹிமா அருமையாக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார் .ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது.இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் " இவ்வாறு பேசினார் .



பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியவை " முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார் .நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்" என பேசினார்.



பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசைஅமைப்பாளர் அர்ரோல் கொரளி பேசியவை " இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசைஅமைத்துள்ளேன்.7 பாடல்களுள் ஒவ்வொருவிதம் " இவ்வாறு பேசினார்.



பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை மஹிமா நம்பியார் பேசியவை " வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்" இவ்வாறு பேசினார் .



பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியவை " நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த  நடிப்பை தந்துள்ளார்.படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார்.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பேசியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா