சற்று முன்

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |   

சினிமா செய்திகள்

ஜோதிகாவின் நடனத்தில் ஜிமிக்கி கம்மல் பாடல்
Updated on : 03 August 2018

கடந்த வருடம் மலையாளத்தில் உருவாகி சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு ஆட்டம் போடா வாய்த்த பாடல் ஜிமிக்கி கம்மல்.



 



இந்த பாடல் காதுகளில் விழுந்தவுடன் நம்மளையே அறியாமல் ஆட தோன்றும். அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு உண்டு. சமூக வளையதளங்களில் அவரவர் நடன அசைவுகளில் ஜொலித்த ஜிமிக்கி கம்மல் பாடலை ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும்  மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம். சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.



 



ஜி. தனஞ்ஜெயன் , லலிதா தனஞ்ஜெயன் , விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது

 





ஜோதிகாவுக்கு ஏற்கனவே கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்  உள்ளது. மீண்டும் ஜிமிக்கி கம்மலோடு வரும் ஜோதிகாவை பார்க்கும்  கேரள ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும். 



 





இந்த படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். 



 



இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 



 



மாபெரும் புகழ் பெற்ற “ ஜிமிக்கி கம்மல் “ மலையாள  பாடலின்  உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் முறைப்படி பெற்றுள்ளார். இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது.



 



இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல்  செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா