சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

நகைச்சுவை கலந்த ஒரு காதல் படம் - பியார் பிரேமா காதல்
Updated on : 06 August 2018

கண்ணை கவரும் நிறைய வண்ணங்கள், மிகுதியான இசை ஜாலம் என்று ஜொலிக்கும்  "பியார் பிரேமா காதல்" எல்லோருடைய மனங்களிலும்,மயக்கும் தருணஙாக நிறைந்திருக்கிறது. காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் வணிக அரங்கில் இத்தகைய ஆர்வத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா என்ற ஒரு மந்திரக்கோல், அவருக்கு நன்றி. இது  ஹரீஷ் கல்யாண் தன் இதயத்தின்  ஆழத்திலிருந்து சொன்ன வார்த்தைகள்.



"நிச்சயமாக, "பியார் பிரேமா காதல்" யுவன் ஷங்கர் ராஜா சாரின் சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இசை நூலகம் இடைவிடாமல் தனது செயலாற்றலால், காலத்தால் அழியாத இசையுடன் நிரம்பி வழியும் போது, ஒரு படைப்பாளியும் காதல் இசையை அளிக்க விரும்புவார். இந்தத் திரைப்படத்தை அவர் தாய்-குழந்தை என்று ஒப்பிடுகிறார். குறிப்பாக அவருடைய பாடல்களை பார்த்த பிறகு, என் வார்த்தைகளை மக்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.



ஹரீஷ் தொடர்ந்து கூறும்போது, "யுவன் சார், அது வெறும் இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்பது வியப்புக்குரியதல்ல. ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது" என்றார்.



அவரது கதாபாத்திரத்தை பற்றி கூறும்போது, "எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும்  உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன்" என்றார்.



ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள்.



இயக்குனர் இளன் திறமைகள் பற்றிய நேர்மறையான பேச்சுக்கள் ஏற்கனவே பரவி, ஒவ்வொரு தயாரிப்பாளரின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். மணிகுமரன் சங்கரா (எடிட்டிங்), ராஜா பட்டாச்சார்யா (ஒளிப்பதிவு) மற்றும் ஈ. தியாகராஜன் (கலை) ஆகியோர் பியார் பிரேமா காதல் படத்தின் வண்ணமயமான தோற்றத்துக்கு பின்னணியில் இருக்கும் மாயவித்தைக்காரர்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா