சற்று முன்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் 50.ஆவது படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது
Updated on : 10 August 2018

திரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து,  நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது. 

இளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார்.இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு  வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது, என்ற தகவலையும் தெரிவித்தார் ஜமீல். 



"இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள்.ஹன்சிகா உரிமையுடன் இந்த கதா பாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார்  தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது" என்கிறார் U R ஜமீல் நம்பிக்கையுடன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா