சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

ஹன்சிகா நடிக்கும் படத்தின் தலைப்பு மஹா
Updated on : 13 August 2018

தமிழ் திரை உள்சகின் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று வீற்று இருக்கும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும்  புதிய படத்தின் தலைப்பு அறிவிக்க பட்டு உள்ளது.  "மஹா"என்று தலிப்பிடப் பட்டு இருக்கும் இந்த படம் ஒரு crime திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதி அழகன் மேலும் கூறியதாவது " ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேய நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும் , ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை  மனதில் வைத்து , அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார். இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு  பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக "மஹா" இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன்."மஹா"திரைப்படம் மூலம ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெரிய பெருமை" என்கிறார் தயாரிப்பாளர் மதிஅழகன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா