சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

நடிகர் வீரா நடித்து வரும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
Updated on : 13 August 2018

ராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா இப்பொழுது மகிழ்ச்சியின் உச்சியில்.அவர் தற்போது நடித்து வரும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர  உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று  தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அதர்வா =ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் "100" படத்தையும் . ஆதி நடிப்பில் ஆர் எக்ஸ் 100 என்கிற திரைபடத்தையும் இதே நிறுவனத்தார்  தயாரிக்கிறார்கள் என்பதுக் குறிப்பிட தக்கது.



வீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி  மாளவிகா நாயர்.பல்வேறு படங்களை நிராகரித்து வந்த மாளவிகா இந்த கதையை கேட்ட மாத்திரத்தில் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா, ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன்  இயக்கத்தில், madly  ப்ளூஸ் இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில், விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார். 



 " அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" ரசிகர்களை கட்டிப்போட்டு கவர்ந்து இழுக்கும் படமாகும். மிக சிறந்த நடிக நடிகையர், திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் தரத்தை பற்றி கேள்விப்பட்ட clap போர்டு productions நிறுவனத்தை சார்ந்த சத்தியமூர்த்தி உடனே இந்த படத்தின் திரைஅரங்கு விநியோக  உரிமையை பெற்று உள்ளார். அவருக்கு என் நன்றியை உரிதாக்குகிறேன்.இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் " என நம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா