சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

தமிழ் மொழி 5000 வருடம் பழமை வாய்ந்தது - Masoom Shankar
Updated on : 17 August 2018

basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட  ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர்கள் நான் நல்ல அனிமேட்டர் ஆக வருவேன் என்று நினைத்தார்கள்.



ஆனால் எனது தோழியின் மூலமாக  ஈவென்ட் துறையைப்பற்றியும், அதில் வரும் வருமானத்தை பற்றியும் தெரிந்துகொண்டேன், எனக்கு அதை முயற்சி பண்ணி பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது, ஆகையால் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். ஆனால் எனது பெற்றோர்கள் அனிமேட்டர் ஆகத்தான் ஆக வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஆனாலும் நான் ஈவென்ட் துறையிலேயே பணியாற்றி வந்தேன்.  



இதன் மூலமாக எனக்கு  "band baja bharat"  படக்குழுவிடம் தொடர்பு கிடைத்தது, இந்த தொடர்பின் மூலமாக சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன், பிறகு நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு  "casting assistant" ஆகவும்  பணிபுரிந்தேன், இவ்வாறாக 6 வருடம் கழிந்தது.



இந்த துறைக்குள் எப்படி வந்தீர்கள்..? 



'காந்திகிரி' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் போது நடிகர் ஓம் பூரி அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் பொழுது அவர் நீ உதவி இயக்குனராக இருக்கவேண்டாம் நடிக்க போ என்று கூறினார். அதன் பிறகு அவரது மனைவி சீமாவிடம் இருந்து ஒரு சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது அதைக்கேட்டதும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஓம் பூரி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 



பிறகு எனது தோழியின் மூலம் தமிழ் சின்னமாவில் ஒரு படத்திற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக அறிந்தேன், உடனே அதில் கலந்து கொண்டேன், ஆனால் பிட்னஸ் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டேன். என்னை தயார் படுத்திக்கொண்டு மீண்டும் ஆடிஷன் சென்றேன் முதல்முறை என்பதால் பதட்டமாக இருந்தது, கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது ஆடிஷன் முடிந்து திரும்பினேன். சில நாட்கள் கழித்து  நீங்கள் 'நாகேஷ் திரையரங்கம்'  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக  தேர்ந்தெடுக்கபட்டுள்ளீர் என்று எனக்கு அழைப்பு வந்தது, எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.



90ML குழுவுடன் வேலை பார்ப்பது எப்படி இருக்கிறது..? 



மிகவும் ஜாலியாக இருந்தது, பொதுவாக நிறைய நடிகைகள் இருந்தால் சின்ன சின்ன விஷயங்களில் சமாளிப்பது கஷ்டம் என எண்ணுவார்கள். ஆனால் MRS.அனிதா உதீப்  எங்களுக்கு இயக்குனராக கிடைத்தது பாக்கியம் என்றே கூறலாம், ஏனென்றால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இயக்குநராக  மட்டுமல்லாது ஒரு தோழியாகவும், சகோதரியாகவும் சில சமயங்களில் அம்மாவாகவும் எங்களை பார்த்துக்கொள்வார். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப அமைதியாக, சீரியஸ் ஆக இருக்கும் ஆனால் 90ml-ல் தினமும் நிறைய சிரிப்பு, ஜோக்ஸ் என கலகலப்பாக இருக்கும். ஓவியா ஒரு டார்லிங், அவரைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை  ரொம்ப அன்பானவர்.



மொழியை கற்றுக்கொள்ள  எவ்வளவு கடினமாக இருந்தது..?



ஆரம்பத்தில் எனக்கு இருந்த ஒரே பயம் மொழி தான். ஆனால் நான் விட்டுவிட வில்லை, தமிழ் மொழி 5000 வருடம் பழமை வாய்ந்தது அதன் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தால் அதை கற்றுக்கொள்ள விரும்பினேன்.  எனக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் அசிஸ்டன்ட்களை நான் சரியாக வசனத்தை உச்சரிக்கும் வரை விடமாட்டேன் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் அவர்கள் ரொம்ப அன்பானவர்கள் எத்தனை முறை கேட்டாலும் பொறுமையாக சொல்லித்தருவார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா