சற்று முன்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

கனா படத்துக்காக நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்
Updated on : 23 August 2018

மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்,பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் குரலில் " கனா" படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து  உள்ளார்.



"அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது "என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்" என்கிறார் திபு. 



மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது. தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது. 



புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. 'சிவகார்த்திகேயன்' சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய  தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார் என்பதுக் குறிப்பிடடத்தக்கது.



இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க  ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா