சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார் கவிஞர் வைரமுத்து
Updated on : 25 August 2018

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.



இதுவரை தொல்காப்பியர் - திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - செயங்கொண்டார் - கம்பர் - அப்பர் – ஆண்டாள் - திருமூலர் –– வள்ளலார் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - கலைஞர் – மறைமலையடிகள் - புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 18 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 19ஆம் படைப்பாகக் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார்.



ஆகஸ்ட் 25 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தையர் வேதநாயகம் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் மதுரா வாழ்த்துரை வழங்குகிறார். விழாவைத் திருநெல்வேலி பைந்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது.



நெல்லை பைந்தமிழ் மன்றச் செயலாளர் செ.திவான், ம.தி.மு.க நெல்லை மாநகரச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், ம.தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், வெற்றித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கோவில்பட்டி நாகஜோதி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, சிவகாசி ரவி, மதுரை சுரேஷ் யு.எஸ்.டி.சீனிவாசன், நெல்லை ஹரிஹரன், மருக்காலங்குளம் வைரமுத்துதாசன், செங்கோட்டை முரளி, கொட்டாகுளம் முருகன், கடையம் சொக்கலிங்கம், அச்சம்பட்டி செல்லத்துரை உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா