சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

பிரபுதேவா! நீங்கள் இந்தியாவின் பொக்கிஷம் - பாரதிராஜா
Updated on : 25 August 2018

பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தரவரிசைகளுக்கும்  அப்பால் உள்ள மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய மனிதர்களின் மனதிலிருந்து வரும் பாராட்டுகள் தான். பிரபுதேவாவின் லக்‌ஷ்மி படத்தின் மொத்த குழுவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பாராட்டு மழையில் நனைந்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இது வெறும் ஒரு வாய்மொழி குறிப்பு இல்லை. சென்னை பிரிவியூ திரையரங்கில் பாரதிராஜா 'லக்ஷ்மி' திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு மகிழ்ந்தபோது மொத்த குழுவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தது.



படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து ஆச்சரியப்பட்டார். "நீங்கள் இந்தியாவின் பெருமை" என்று கூறியதோடு, இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார். "இந்த குழந்தைகள் வேறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது ஆழ்ந்த நடிப்பாலும் அபாரமான திறமை உடையவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்றார்.



இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பின்னர் தொலைபேசி அழைப்பில் பிரபுதேவாவிடம் பேசிய அவர் மேலும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.  "வார்த்தைகளை கோர்த்து எவ்வாறு உங்களை பாராட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை, நீ இந்தியாவின் பொக்கிஷம்" என்றார்.



நேற்று (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாகிய லக்‌ஷ்மி பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சல்மான் யூசுப் கான், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் (இசை) மற்றும் நிரவ் ஷா (ஒளிப்பதிவு) ஆகியோர் படத்தின் மிகவும் வலுவான தூண்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா