சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி மீண்டும் இணையும் தனி ஒருவன் 2
Updated on : 28 August 2018

ஒரு சில திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். படத்தின் கதையோ அல்லது அதை படமாக்கிய விதமோ அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். ஆனால், தனி ஒருவன் அனைத்து வகைகளிலும் ரசிகர்களுக்கு  இத்தகைய அனுபவத்தை வழங்கியது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை பெற்று தந்த "தனி ஒருவன்"  இன்று 3வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனை கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தனி ஒருவன் 2 படம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. 



இந்த உற்சாகமான தருணத்தை பற்றி இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, "தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனி ஒருவன் 2 மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம். சமூக பின்னணியில் அமைக்கப்படிருக்கும் இந்த தனி ஒருவன் 2 கதையில், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமான முறையில் இருக்குமாறு முயற்சித்து வருகிறோம்" என்றார். 



முதல் பாகத்தில் நடித்த நாயகனாக நடித்த ஜெயம் ரவி தனி ஒருவன் 2ஆம் பாகத்திலும் நாயகனாக தொடர்கிறார். புதிய சவால்களையும், மோதல்களையும் இந்த படத்தில் சந்திக்க தயாராகி வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா