சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது
Updated on : 29 August 2018

தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக "ஜாங்கோ" எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

 

ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. "ஜாங்கோ" படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும்,  மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.



இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



சதிஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மிர்னாலினி கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:



தயாரிப்பு - சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இணை தயாரிப்பு - சுரேந்திரன் ரவி

இயக்கம் - மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு - கார்த்திக் K தில்லை

இசை - நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால்

கலை - கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் - மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி - ஹரி திணேஷ்

புரொட்கஷன் கண்ட்ரோலர் - சின்னமனூர் K சதிஷ் குமார்

போஸ்டர் டிசைன் - வின்சி ராஜ்

எக்சிகியுடிவ் புரொடுயசர் - ஸ்ரீ சக்ரா .A

மக்கள் தொடர்பு - நிகில்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா