சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

வில்லனுக்கு லவ் யூ மெசேஜ் அனுப்பிய பெண் தயாரிப்பாளர்
Updated on : 29 August 2018

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். 



இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்.. 



இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..  வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.



இந்தப்படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில புதிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.. அவர்கள் பேசியவற்றில் இருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ உங்கள் பார்வைக்காக..



இந்தப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்த காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்..இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்த காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.. இது ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய செய்தி தான்..  



ஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளை படமாக்கும்போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாறமுடியவில்லையாம்.. அதற்காகவே இயக்குனர் மதுராஜிடம்  அடிக்கடி சென்று "ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்" என கேட்டாராம். "இது என்னடா வம்பா போச்சு.. ஒருதடவை அறைஞ்சது குத்தமாய்யா" என ஜெர்க் ஆன மதுராஜ்  'யம்மா ஆள விடு சாமி" என கெஞ்சாத குறையாக நழுவ, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானதாம்.



இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா, டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வருபவர். தனது காதல் கணவர் எம்.எஸ்.குமார் மனதில் கனன்று கொண்டிருந்த நடிப்பு ஆசையை நிறைவேற்ற சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். துணி பிசினஸில் உடனுக்குடன் லாபம் பார்த்துவந்த இவருக்கு, சினிமாவில் கேட்க கேட்க  பணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒன்வே விஷயம் அவ்வப்போது டென்ஷனை ஏற்றிவிடுமாம்.



உடனே கோபமாக கத்த ஆரம்பிக்கும் அவரை, அவரது கணவர் எம்.எஸ்.குமார் கூல் பண்ணும் டெக்னிக்கே அலாதியானது. அவர் கோபமாகும் சமயத்தில் அவருக்கு பிடித்த சாமி பாடலை பாட ஆரம்பித்தால், உடனே கோபம் தணிந்து படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை கொடுத்து விடுவாராம்.



ஆனால் இந்த கோபமெல்லாம் முழுப்படத்தையும் தயாரிப்பாளர் சந்திரா பார்க்கும் வரையில் தான்.. கணவர் ஊரில் இருக்கும்போது இங்கே படத்தை பார்த்த சந்திரா, அதில் தனது கணவரின் நடிப்பை பார்த்துவிட்டு தனது கணவருக்கு 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பினாராம். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? தனது காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு 'லவ் யூ' சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டதாம்.



இதில் என்ன பியூட்டி என்றால் கணவரின் ஆசையை நிறைவேற்ற படம் தயாரித்தாலும் கூட, கணவரை ஹீரோவாகத்தான் நடிக்கவைப்பேன் என அவரும் பிடிவாதம் காட்டவில்லை.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவரும் அடம் பிடிக்கவில்லை. சினிமாவுக்குள் சொந்தப்பணத்தை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிக்க வருபவர்கள் கவனிக்க வேண்டிய பாடம் இது.



இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள உத்தமராசா இதில் தான் அறிமுகம் ஆகியுள்ளார். அடிப்படையில் டிராக் பாடகரான இவர் ஒரு பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணியாற்றினாராம். பொதுவாக இசையில் தன்னுடைய குரு யாரென்று சொல்ல சிஷ்யர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் உத்தமராசா தனது குருவின் பெயரை சொல்லவே விரும்பவில்லை. அந்தளவுக்கு, தனது சிஷ்யர்கள் நன்றாக முன்னேறுவதை காண சகிக்காத ஆசாமியாம் அந்த இசையமைப்பாளர். யார் அவரோ..? உத்தமராசாவுக்கே வெளிச்சம்.



இந்தப்படம் ஆணவக்கொலை பற்றி உருவாகியுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் மதுராஜ் பல இடங்களில் சொல்லிவிட்டார்..  அதேசமயம் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு 'யு' சான்றிதழும் கொடுத்துவிட்டது. ஆனால் அடுத்தவாரம் படம் ரிலீசாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தப்படத்தின் கதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டியே தீரவேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பஸ் பிடித்து சென்னைக்கு வந்து  திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்துகொண்டு இயக்குனர் மதுராஜை மிரட்டி வருகிறார்களாம் சில ஜாதி அமைப்பு ஆட்கள். இது என்னடா புது சிக்கல், இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிவைத்துவிட்டு திகிலடித்து கிடக்கிறார் இயக்குனர் மதுராஜ்.



ஒரு சண்டைக்காட்சியில் நாயகன் பிருத்வியின் முகத்தை தனது காலால் நடிகர் எம்.எஸ்.குமார் அழுத்தி மிதிக்க வேண்டும்.. பிருத்வி எவ்வளவு பெரிய நடிகரின் மகன்.. அவரைப்போய் நான் மிதிப்பதா என எம்.எஸ்.குமார் தயங்க, அட பரவாயில்ல பாஸ்.. சும்மா மிதிங்க என அவரை உற்சாகப்படுத்தி அந்த காட்சி இயல்பாக வரும் வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம் பிருத்வி. இந்தப்படம் பிருத்விக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இயக்குநர் மதுராஜ்.



மலையாள தேசத்தை சேர்ந்த நாயகி வீணா, ஷூட்டிங் வந்த முதல்நாள் தனது அம்மாவுடன் வந்தாராம்.. ஆனால் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா காட்டிய அக்கறையையும் பரிவையும் பார்த்து நெகிழந்துபோய் தனது அம்மாவை ஊருக்கு பேக்கப் செய்து அனுப்பிவிட்டாராம். அதன்பின் படப்பிடிப்பு நடைபெற நாட்கள் முழுதும் தயாரிப்பாளர் ஜெய் சந்திராவுடன் தான் தங்கியிருந்தாராம் வீணா.  தன்  வீட்டுப்பெண் போல் பார்த்துக்கொண்டாராம் ஜெய் சந்திரா.  



இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவே யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் தான். அதுமட்டுமல்ல புது இசையமைப்பாளர், புது டீம் என்கிற பாகுபாடு பார்க்காமல், கேட்டதும் ஒப்புக்கொண்டு  நடிகர் சிம்பு இந்தப்படத்திற்காக 'பக்கு பக்கு' என்கிற பாடலை பாடியுள்ளார். அந்தப்பாடல் யூ டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..



வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படம் ரிலீசுக்கு பின்னால் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா