சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான் !
Updated on : 30 August 2018

ரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள  படம் 'ரணம்' . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள்ளார் . இதன் படப்பிடிப்பு முழுதும் அமெரிக்காவில் நடை பெற்றது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது . ஏற்கனவே ரஹ்மான் தமிழ் வசனம்  பேசி வெளிவந்த இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பும் ஏற்ப்படுத்தியது . ரஹ்மான் இந்த படத்தில் தாமோதர் என்ற தமிழ் கதாபாத்திரமாக தோன்றுகிறார் . இஷா தல்வார் கதாநாயகியாக நடிக்கிறார் . நேற்று  'ரணம்' படத்தின்   ட்ரைலர் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வெளியிட்டார் . ட்ரைலர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை ஈர்த்து  லட்சம் பார்வையாளர்களை தொட்டுள்ளது . எனவே இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளது .ரஹ்மானுக்கு 'ரணம்'.பெரிய திருப்பு முனையாக அமையும் என்றே மலையாள திரை உலகினரின் கணிப்பு .



தமிழ் தெலுங்கு மொழி  படங்களிலும்  பரபரப்பாக நடித்து வரும்  ரஹ்மான் தற்போது நிசார் ஷாபி இயக்கும் தமிழ் - தெலுங்கு இரு மொழி படமான '7(செவன்)' னில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் .  இந்த படத்தின் டீஸரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் தெலுங்கில் 'காசி ' (GHAAZI)  புகழ் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் வருண் தேஜ் ,அதிதி ராவ் ஜோடி சேரும்   'அந்த ரக்ஷா' 9000 km per hour'   என்ற பிரம்மாண்ட படத்தில்   இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி  கதாபாத்திரமாக நடிக்கிறார் .இந்த படம் தெலுங்கில் மிகவும் எதிர் பார்க்கப்படும் முக்கிய படமாகும் .தற்போது தென்னிந்தியாவிலுள்ள இளம் இயக்குனரர்களின் விருப்ப நடிகராக பிசியாகி விட்டார் ரஹ்மான் .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா