சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சேது படத்தை நினைத்து நினைத்து தினம் தினம் வருத்தப்படுவேன் - விக்னேஷ்
Updated on : 02 September 2018

தமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா பாலுமகேந்திரா வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்....



தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்...



ஏன் இந்த வில்லன் வேஷம் என்று கேட்டோம்...



எனக்கு சினிமா மோகம் அதிகம்...24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்...



பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.



சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார்..கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன்..ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது.மிஸ்ஸாகி விட்டது  இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு  நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம் நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார்.  நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.



படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.



இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்...தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள்...என்பது தான்.



சேது படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்?  என்று கேள்வி கேட்டோம்...



அதை நினைத்து தினமும் வருத்தப் படுவேன்...பாலாவும் நானும் ரூம் மேட்ஸ்.



பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி....ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.



இதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா...?



நடிப்பேன்...நடிப்பு தானே ..சேது மாதிரி  பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன்...அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன்...நிச்சயம் ஜெயிப்போம் என்றார்  நம்பிக்கையுடன் விக்னேஷ்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா