சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் '46'
Updated on : 04 September 2018

விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் TR.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது '46' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்..



இந்தப்படத்தில் காத்திருப்போர் பட்டியலில் நடித்த சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை ஹீரோ கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான  மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் நடிக்கின்றனர்.. தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.



வினோத்ராஜன் ஒளிப்பதிவை கவனிக்க, மணிக்குமரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'பியார் பிரேமா காதல்' படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார். கலை ; ராமு தங்கராஜ் சண்டைப் பயிற்சி ; ஸ்டன்னர் ஷாம்  நடனம் ; சாண்டி-அசார் 



சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்..



இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள்.. இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக  எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம்.. அந்தவகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம். 



"இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசண்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம்..  இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம்.. குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்" என்கிறார் இயக்குநர் TR.பாலா.  இந்தக்காட்சியை பார்த்தவர்கள் ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கி இருப்பதாக பாராட்டினார்களாம்..



இதுவரை இப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை.  யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் TR.பாலா இந்தக் கதையைப் படமாக்க முடிவு செய்தாராம். அந்தவகையில் இவர் தான் இந்தியாவிலேயே இந்த கதைக்களத்தில் படம் இயக்கும் முதல் ஆள் என தாராளமாக சொல்லலாம்.



"சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்" என்கிறார் இயக்குநர் TR.பாலா.



நடிகர் விஜய் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் அவரிடமிருந்து பங்க்சுவாலிட்டியை எப்படி கடைபிடிக்கணும், ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி எப்படி படம் இருக்கணும் என சில டிப்ஸ்களை கற்றுக்கொண்டது இந்தப்படத்திற்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அவர்தான் எனக்கு ரோல் மாடல் என்கிறார் TR.பாலா.



ஷாம் நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது சரத்குமாரை வைத்து 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் எஸ்.டி.வேந்தனின் மகன் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில்  தந்தை-மகன் இருவருமே தங்களது படப்பிடிப்பை சில நாட்கள் ஒரே சமயத்தில் நடத்தியுள்ளார்கள் என்பதுதான்.

 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு டீம் தயாராகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா