சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் ஆடை
Updated on : 05 September 2018

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற  மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது  முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் . படத்தை பற்றி விளக்கவே இயக்குனர் ரத்ன குமார் 



  "இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். 

போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை.



பொதுவாகவே இது மாதிரியான , கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான  படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும்  உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் "என்று கூறினார்



            . "ஆடை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை V-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்



ஆடை பற்றி அமலா பால் .......





"ஆடை" படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. "ஆடை" சாதாரண படமும் அல்ல.இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும். இயக்குனர்  ரத்னகுமரின் மேயாத மான் பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன  போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும்  கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது.அவ்வளவு உணர்ச்சிகரமான கதை " என்றார் அமலா பால்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா