சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

எஸ் focus நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் வண்டி
Updated on : 06 September 2018

தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் "வண்டி".விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கும் இந்தப் படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் focuss நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன். 



சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான "குப்பத்து ராஜா" வெகு விரைவில் வெளி வர உள்ளது. "என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை   தொடர்ந்து வெளி இடுவதுதான்.  "வண்டி"  படத்தின் விநியோக உரிமையை பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன். ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக promotions மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு,  எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட "வண்டி" வெற்றி பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்" என்கிறார் எம் சரவணன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா