சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்த படம் ஜாக்
Updated on : 07 September 2018

முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.



திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'வான்' படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு  நாயை  மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. 



புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். 'ஜாக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.



இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, "இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக  இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.



படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, "ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா