சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை அறிக்கை
Updated on : 09 September 2018

வணக்கத்துக்குரிய பெருமக்களே!



27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள்.



நெடிய மதில்களுக்கிடையில் நீண்டகாலமாக சுழன்றுக் கொண்டிருக்கும் அவர்களது வெப்பம் மிகுந்த பெருமுச்சுகள் உங்களால் சுவாசம் பெறட்டும்.



அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே எனும் அண்ணல் அம்பேத்காரின் கூற்று உங்களால் உயிர் பெறட்டும்.



நம் பிள்ளைகளின் கைகளைத் தரித்திருக்கும் துன்பப்பூட்டுகளை உங்களது கைகளில் திகழும் ஆட்சி அதிகாரம் எனும் திறவுகோல் கொண்டு திறந்துவிடுங்கள்.



உலகமெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்கள் நீங்கள் இருக்கும் தசைநோக்கி வணங்கி நிற்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானம் அவர்களின் வழியில் ஆட்சி செய்யும் உங்களது அமைச்சரவையால் சாத்தியமாகும் வரலாற்று  தருணம் வாய்த்திருக்கிறது. நம் பிள்ளைகள் சுதந்திரமாக சிறகடித்து வெளிவரும் வரம் ஒரு பச்சைத் தமிழரால் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே காலம் இதுவரை காத்திருந்ததாக உணர்கிறோம்.



உங்களது தலைமையிலான அமைச்சரவை இன்று இயற்றும் தீர்மானம் கோடானகோடி தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை ஏற்படுத்தும்.



சாதாரண ஒரு குடிமகன், தானே ஆட்சியில் இருப்பதாக உணரச்செய்யும் உங்களது எளிமையும் கனிவும் ஏழு தமிழ்ப்பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நெடுங்காலக் கண்ணீரை துடைக்கப்போகும் கருணையும் என்றென்றும் எல்லோராலும் நினைவு கூறப்படும்.



நினைத்து பார்ப்பவன் மனிதன், நினைவில் நிற்பவனே மாமனிதன். வாழும் மண்ணும் உள்ளளவும் நீங்கள் தமிழ்த் தலைமுறையால் மாமனிதராக நினைவு கூறப்படுவீர்கள்.



 



ஏழு தமிழர்களும் மட்டுமல்லாது ஏனைய தமிழர்கள் அனைவரும் உங்களை குலசாமியாக கொண்டாடுவார்கள். 27 ஆண்டுகள் சிறையில் வாடிய ஏழு பேரும் தமது வாழ்நாள் முடிவதற்குள் எல்லோரையும் போல நாமும் வாழ்ந்து விடமாட்டோமா என்று ஏங்கித்தவித்த தவிப்பு உங்களால் முடிவுக்கும் வரப்போகிறது என்று முழுமையாக நம்பிக் காத்திருக்கிறோம்.



அரசியலைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில அரசுக்கான இறையாண்மை அதிகாரம் எனும் நல்லதிகாரத்தை பயன்படுத்தி உங்களை நம்பிக்காத்திருக்கும் அவர்கள் ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என்று உங்களை வணங்கி வேண்டுகிறோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா