சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

சீமராஜா ஒளிப்பதிவு வழக்கத்துக்கு மாறாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறேன் -பாலசுப்ர
Updated on : 12 September 2018

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், படம் பார்ப்போரின் கண்களை மட்டுமின்றி, படம் பார்க்கும் அனுபவத்தையும் குளிர குளிர குளிர்ச்சியாக வைத்து இருப்பார். அவரது எண்ணம் போலவே அவரது காட்சி அமைப்பும் வண்ண மயமாக இருக்கும்.அவரது கடுமையான நேர்த்தியான உழைப்பு சீமராஜா படம் எங்கும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. சீமராஜா தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறுகிறார் பாலசுப்ரமணியம். "எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில்,  என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது. அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், என ஒவ்வொருவரும் போட்டி போட்டு உழைத்தோம். இந்த படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஓளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.  சிவகார்திகேயன், சமந்தா, சூரி , சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என  குவிந்து இருந்த நட்சத்திர குவியல் படத்துக்கு பெரிய அந்தஸ்தை பெற்று தந்து இருக்கிறது. படத்தை குறிப்பிட்ட காலத்தில் , சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்பதால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மன களைப்பு கூட   இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் தந்தது. 24 A M ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளிவரும் "சீமராஜா"  எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தை பெற்று தரும்"என உறுதி பட கூறினார் பாலசுப்ரமணியம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா