சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சீமராஜா ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் - இசையமைப்பாளர் டி இமான்
Updated on : 12 September 2018

'திருவிழா' மற்றும் 'கொண்டாட்டம்' போன்ற வார்த்தைகள் எப்போதுமே இசையோடு மிக நெருங்கிய உறவை கொண்டவவை. சீமராஜா படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருவது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமானின் ஸ்டூடியோவில் உருவான பாடல்கள் தான் ஊர் திருவிழாக்கள் முதல் நகரின் பார்ட்டிகள் வரை ஒலித்து வருகிறது. குத்துபாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல் என சீமராஜா ஒரு ஹிட் ஆல்பமாக மாறியிருக்கிறது. "சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான். 



"திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள  மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சீமராஜா இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இந்த படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப்பெரிய விஷயங்களை செய்ய என்னை தூண்டியது" என்றார் டி.இமான்.



பாடல்கள் படமாக்கப்பட்டதை பற்றி அவர் கூறும்போது, "சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களை பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்" என்றார்.



சீமராஜா காய்ச்சல் காட்டுத்தீ போல மிக வேகமாக பரவி வருகிறது. விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கி  டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன், லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா