சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

Seemaraja On Editing Table Itself Was A Celebrative Experience – Editor Vivek Harshan
Updated on : 12 September 2018

ஆக்‌ஷன், காமெடி, காதல், ஹாரர் என எந்த வகை படமாக இருந்தாலும் படத்தொகுப்பாளர் அனுபவிக்கும் மன அழுத்தம், காலக்கெடு எதுவுமே தவிர்க்க முடியாதவை. எனினும், அப்படிப்பட்ட ஒரு படத்தொகுப்பாளரிடம் இருந்து, குறிப்பாக விவேக் ஹர்ஷன் போன்ற தேசிய விருது பெற்ற ஒருவரிடம் இருந்து, "சீமராஜா எடிட்டிங்கிலேயே எனக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவமாக  இருந்தது" என்ற ஒரு வார்த்தைகளை கேட்பது அரிதினும் அரிது.



இயக்குனர் மனதில் நினைத்து எடுத்த காட்சிகள், படத்தொகுப்பாளரின் சரியான உணர்வை தூண்டிவிடுவது மிகவும் அரிது. சீமராஜா படத்தில்  பணிபுரியும் போது, இறுதி வடிவம் கொடுக்கும் முன்பே நிறைய காமெடி,  உணர்வுப்பூர்வமான காட்சிகள் என் உணர்வை சரியாக கணித்தன. திரையரங்குகளில் என் அனுபவத்தின் அளவை விட இரட்டிப்பு அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன். முக்கியமாக, டிரெய்லரில் நீங்கள் சில நொடிகள் பார்த்த ஒரு பகுதி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்" என்றார் விவேக் ஹர்ஷன். பொன்ராம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்திருந்தார் விவேக் ஹர்ஷன். 



சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வித்தியாசமான அவதாரத்தில் சிம்ரன் மிரட்ட, சூரி வழக்கம் போல காமெடியில் பின்னி எடுக்கப் போகிறார். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.  



சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் வெற்றிக் கூட்டணி, டி இமான் (இசை), பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), விவேக் ஹர்ஷன் (படத்தொகுப்பு) யுகபாரதி (பாடல்கள்) மற்றும் பலர் இந்த படத்திலும் பணி புரிவது ஏற்கனவே எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா