சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் - சிவகார்த்திகேயன்!
Updated on : 12 September 2018

சீமராஜாவின் வருகை ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம், புற நகரம், கிராமப்புற பகுதிகள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் முன்பதிவும், கொண்டாட்டங்களும் படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதை பறை சாற்றுகிறது. படத்தின் விளம்பரங்களிலும், ட்ரைலரிலும் சிவகார்த்திகேயனின் மாஸ் அவதாரம் அவரது ரசிகரக்ளை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் இது கொஞ்சம் சீரியஸான படம் என்ற உணர்வை கொடுத்துள்ளது.  



இத்தகைய சந்தேகங்கள் எழும் முன்பே, சிவகார்த்திகேயன் தெளிவான விளக்கத்தை தருகிறார். அவர் கூறும்போது, "சீமராஜாவில் தொடக்கம்  முதல் இறுதி வரை சூரி தன் இடைவிடாத காமெடியால் அதிர வைப்பார். இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தனித்துவமான கருத்தை கொண்டு உருவாகியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு எந்த சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கும். ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன. சீமராஜாவிலும் நம்மால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க வேண்டும் என்று படத்தின் திரைக்கதை எழுதும் முன்பே முடிவெடுத்தோம். படத்தின் மையக்கரு கொஞ்சம் அழுத்தமாக இருப்பினும், நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன் என குடும்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். 



படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களை பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, "அது ஒரு அற்புதமான அனுபவம்' என்று வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட, சீமராஜாவின் மொத்த அனுபவங்களையும் சேர்த்து வைக்க விரும்புகிறேன். குறிப்பாக, நெப்போலியன் சார், சிம்ரன் மேடம், லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களின் நடிப்பு மற்றும் எளிமையை கண்டு வியந்தேன். உண்மையில், நான் அவர்களிடம் இருந்து சில நல்ல பண்புகளை எடுத்துக் கொண்டேன். எதிர்கால தலைமுறை நடிகர்கள் வெற்றிகரமாக செயல்பட நிச்சயமாக அந்த பண்புகள் வேண்டும் என நினைக்கிறேன்" என்றார். 



"நான் இந்த படத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு சமந்தா முன்னரே அவரது கதாபாத்திரத்திற்கு தயாராக தொடங்கி விட்டார். ஒரு முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் இடைவிடாமல் நடிக்கும் பிஸியான நேரத்திலும், இந்த படத்துக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதோடு, சிலம்பம் கற்றுக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று தன் நாயகி சமந்தாவை பற்றி புகழ்கிறார் சிவகார்த்திகேயன். 



படத்தில் என் கதாபாத்திரத்தின் கற்பனையான பெயர் சீமராஜா. ஆனால் உண்மையில் இந்த தலைப்பு எங்கள் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு தான் வழங்கப்பட வேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையாக கூட கருதப்படலாம்,  ஆனால் உண்மையில், கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொண்டதே இல்லை. எப்போதும் விழிப்புடன் இருந்தார், சின்ன விஷயங்கள் கூட படத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இல்லையென்றால் ஒரு மாத கால சினிமா ஸ்ட்ரைக்கையும் தாண்டி, சொன்னபடி படத்தை முடித்து விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவது சாத்தியமாகி இருக்காது" என்றார் சிவகார்த்திகேயன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா