சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்
Updated on : 14 September 2018

தமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.



முதல் படம் - சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் - ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.



இரண்டாவது படம் - நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த "சதுரங்க வேட்டை" படத்தை தெலுங்கில் "Bluff Master" என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.



முன்றாவது படம் - இளைங்கர்களுக்கு பிடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம். 



நான்காவது படம் - நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற  "ஆனந்தோ பிரமா" படத்தை தமிழில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.



அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை வரிசைப்படுத்தி தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்கிறார்.



அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா