சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

வசூல் சாதனையில் சீமராஜா!!!
Updated on : 14 September 2018

சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24 AM STUDIOS  நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளி ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் "சீமராஜா" , சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.

"இந்த வெற்றிக்கு காரணமான  சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை 

 அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது , அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்  தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய  வித்தியாசமான வேடங்களில் நடிக்க  வேண்டும் என்று நிலையை தாண்டி , அவரது ரசிகர்களுக்கு  பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான்  சீமராஜா. முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல்  சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரை இடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்.  ஊடக  நன்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும்,இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள் " என்கிறார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா