சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

கேஆர் சந்துரு இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்
Updated on : 14 September 2018

சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உண்டு. ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை கட்டிபோடும் சிறப்பம்ச gvம் இந்த வகை திரில்லர் படங்களுக்கு உண்டு. மேலும் ரசிகர்கள் மனதில் ஒரு அழுத்தத்தையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும். பெரும் வரவேற்பு இருப்பதாலேயே இந்த வகை படங்களை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த வரிசையில் கேஆர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், துஷாரா நடிப்பில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ்.



தயாரிப்பாளர் சாகர் இது பற்றி கூறும்போது, "இந்த  கதையை கேட்ட உடனேயே எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை பிடித்து போக காரணம் இருக்கும்.  என்னுடைய விஷயத்தில் நான் சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களின் தீவிர ரசிகன், ஒரு படம் தவறாமல் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். இயக்குனர் சந்துரு என்னிடம் இந்த கதையை வந்து சொன்னபோது, மற்றவர்கள் பார்க்கும் முன்னரே இந்த படத்தை நான் பார்த்த மாதிரி பெருமையாக உணர்ந்தேன். ஒரு ரசிகனாக இந்த கதையை கேட்டபோது, எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் இயக்குனர். இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை படங்கள் எடுக்கும்போது, கொஞ்சம் விலகினாலும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகும் ஆபத்து இருக்கிறது. ஆனால், இயக்குனர் சந்துரு அவற்றை எல்லாம் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார்" என்றார்.



பிரதாயினி, மீரா மிதுன், ராதாரவி, அஜய், சுரேகா வாணி, ஆசிக், லிஸி, செந்தில் குமரன், சரத், ராஜலக்‌ஷ்மி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கேபி இசையமைக்க, சாபு ஜோசஃப் எடிட்டிங் செய்திருக்கிறார். பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பு), கதிர் நடராசன் (திரைக்கதை), மகா முருகன் (கலை), லினிஷ் பிரசாத் (நிர்வாக தயாரிப்பு), சின்னமணூர் சதீஷ்குமார், எஸ்பி சுரேஷ் (ஸ்டில்ஸ்), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா