சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

திரிஷா நாயகியாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு
Updated on : 15 September 2018

த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. 



தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி என்று பெயர் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ” பரமபதம் விளையாட்டு “. இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். த்ரிஷா மருத்துவராகவும் , மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது , இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான , முக்கியமான படமாக இருக்கும். 

த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார் இயக்குனர் திருஞானம்.



படத்தில் நந்தா , ரிச்சர்ட் , வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றிவிட்டு வந்துள்ளார்.



இப்படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா