சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

பப்பி படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்கம் - சம்யுக்தா
Updated on : 17 September 2018

போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார். 'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் 'பப்பி' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த  தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர். பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக 'பப்பி' என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். 'பப்பி' கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா