சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

உதயநிதி'யின் கண்ணே கலைமானே திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ்!
Updated on : 19 September 2018

உலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது. அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம். அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 



"குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்த பரிசு. பலரும் கூறியதுபோல, சீனு ராமசாமி சாரின் திரைப்படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும், அவை நல்ல வரவேற்பை பெறும்" என்கிறார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.



ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப் மற்றும் வெற்றிக்குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 



யுவன் ஷங்கர் ராஜா, சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்களின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த படத்தின் இசை இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா