சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

ஆக்சன் ஹீரோவாக வேண்டும் - நடிகர் வின்ஸ்குமார்
Updated on : 19 September 2018

தமிழ் திரையுலகில் எத்தனையோ புதுமுக நடிகர்கள் தினந்தோறும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே வெற்றிப்பெறுகிறார்கள். அந்த சிலரின் பட்டியலில் இடம்பிடித்துவிட போராடும் பலரில் வின்ஸ்குமாரும் ஒருவர். கப்பல் படையில் விமானத்துறையில் பணியாற்றியவர் . தற்போது திரைதுறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘போலீஸ் வலை’ என்ற படத்தின் படபிடிப்பின் போது அவரைச் சந்தித்தோம். 



    நடிகரானதன் பின்னணி குறித்து..? 



மார்த்தாண்டம் (கன்னியாகுமரி மாவட்டம்)அருகே உள்ள S.T மாங்காடு கிராமத்தில் பிறந்தேன்  . நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக மும்பையில் கப்பற்படையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது விடுமுறை தினங்களில் மாடலிங்கில் ஈடுபட்டேன். பதினைந்து ஆண்டு காலம் கப்பற்படையில் பணியாற்றிவிட்டு, ஒய்வுபெற்ற பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையாமல் இருந்ததால் நடிகரானேன்.



நடிகராகுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?



கப்பல் படையில் பணியாற்றியதால் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம். நீச்சல் போன்ற சாகச பயிற்சிகளையும் எடுத்திருக்கிறேன். தமிழ், ஹிந்தி, மலையாளம்,ஆங்கிலம்  உள்ளிட்ட பல மொழிகளில் பேசவும் தெரியும். ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களை விரும்பி பார்ப்பேன். பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறேன். 



முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?



இயக்குநர் நிஸார் இயக்கிய ‘லாஃபிங் அபார்ட்மெண்ட் ’என்ற மலையாளப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகராக அறிமுகமானேன். பிறகு காத்தவராயன் , காந்தர்வன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி நடிப்பில் உருவாகி வரும் ‘போலீஸ் வலை ’ என்ற தமிழ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன்.



அடுத்து...?



எனக்கு ஆக்சன் காட்சிகளில் நடித்து காமெடி வித் ஆக்சன் ஹீரோவாக மிளிரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தமிழ் ரசிகர்களும், இயக்குநர்களும் எனக்கு வாய்ப்பளித்தால் கலைசேவை செய்ய தயாராகவேயிருக்கிறேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா