சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு இசையமைப்பாளர் அம்ரீஷ்
Updated on : 19 September 2018

சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது...அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.



இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம்  பகிர்ந்து கொண்டனர்  தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்திசிதம்பரம்.



டி.சிவா பேசும் போது...



இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.



அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம்.



இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசியதாவது...



அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும் என்றார்.



இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது..,.



இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குனர் ஷக்திசிதம்பரம் சார் பிரபுதேவா சார் ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய திரு.தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.



பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.



எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் சார்லி சாப்ளின் 2 மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.



மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில்  வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு...அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்.



சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி என்றார்.  இந்த நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜன் கலந்து கொண்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா