சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி
Updated on : 20 September 2018

'சவால்களை' ஒரு நடிகர் எப்போது விரும்புகிறாரோ, அப்போதிலிருந்து அவர் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்.அப்படி தமிழ் சினிமாவில் சொல்லக் கூடிய ஒரு ஹீரோ தான் ஜெயம் ரவி. சமகாலத்திய ஹீரோக்கள் செய்யத் தயங்கும் பல பரிசோதனை முயற்சிகளை தன் படங்களில் அனாயாசமாக செய்து காட்டுபவர் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் அவரை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் 'டிக் டிக் டிக்' படத்தில் பாராட்டுக்களையும், தனி ஒருவன் 2 பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகும் 'அடங்க மறு' படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் ஆச்சர்ய நாயகனாக எப்போதுமே இருக்கிறார். இந்த வரிசையில் அவர் நடிக்கும் அடுத்த படமும் இதுவரை பார்க்காத வித்தியாசமான படமாக நிச்சயம் இருக்கும்.



வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 20-ந்தேதி காலை பூஜையுடன் தொடங்கியது.



ஒரு சிறந்த படக்குழுவுடன் இணைந்தது பற்றி தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும். இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும்  பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சென்னையில் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம்" என்றார்.



ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா