சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் டாணா
Updated on : 22 September 2018

என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி. 



"இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன். இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது" என்றார் தயாரிப்பாளர் 'நோபல் மூவிஸ்' கலைமாமணி.



நட்சத்திரங்களை பற்றி தயாரிப்பாளர் கூறும்போது, "ஹலோ நான் பேய் பேசுறேன்" போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்" என்றார்.



விஷால் சந்திரசேகர் (இசை), சிவா.ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), ஜி.கே. பிரசன்னா (படத்தொகுப்பு), சதீஷ் கிருஷ்ணன் (நடனம்), பசர் என்.கே.ராகுல் (கலை), கூட்டி (சண்டைப்பயிற்சி), கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பு) மற்றும் 24AM (பப்ளிசிட்டி டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். 



எச்.எஸ்.கான் இணை தயாரிப்பு செய்கிறார். ப்ரொடக்‌ஷன் ஹெட்டாக வி. சுதந்திரமணி பணிபுரிய, நோபல் மூவிஸ் சார்பில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் எம்.சி.கலைமாமணி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா