சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் மதுரை விருந்து
Updated on : 23 September 2018

ராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள்,  சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.



மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல்  சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, 'மதுரை ராஜாம்மாள்  கறிக்குழம்பு' எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள்.



அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, செக்கு எண்ணெய், இமாலயா உப்பு,  நாட்டுக்கோழி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கிய ஆட்டின் இறைச்சி மற்றும் எருமைப்பாலில் தயாரித்த தயிர் என்று அமர்க்களப்படுத்தவிருக்கிறார்கள்.



ஜிகிர்தண்டா பிரியர்களுக்காக மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிகிர்தண்டா இந்த கறிக்குழம்பு உணவகத்தில் கிடைக்கும்.



இதுகுறித்து ராஜா மற்றும் பிரசன்னா கூறும் போது, " தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில்  சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் உணவகத்திற்கு வரலாம்.



சென்னை அசைவ பிரியர்களுக்கும், எங்களது சுவை மிகவும் பிடிக்கும்.." என்றார்.



சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் தொடக்க விழாவில் வெளிச்சம் டிவி இயக்குநர் பாபு, அதிமுக வைச் சேர்ந்த மதிவாணன்,  காவல் ஆய்வாளர்கள் நடராஜன், ரியாஸுதின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா