சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

தனியிசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பா.இரஞ்சித்
Updated on : 26 September 2018

"தனியிசைக்கலைஞர்களுக்கான மேடையை ரஞ்சித் அண்ணன் வழியில் நானும் அமைத்துக்கொடுப்பேன் "ஹிப்பாப் ஆதி.





இயக்குனர் பா.இரஞ்சித்  தின் நீலம் பண்பாட்டுமையம், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ,ரூட்ஸ்  சார்பில் தனியிசைக்கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 



நிகழ்வில் தனியிசைப்பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். தமிழகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் ஹிப்பாப், ராப், கானா, நாட்டுப்புறப்பாடல்கள் பாடப்பட்டன.



நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித்  கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை முதலில் அறிமுகப்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு பல தனியிசைக்கலைஞர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாடுவதற்க்கு வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வாய்ப்புக்கேட்கிற எல்லோருக்கும் ஒரு மேடையை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் ரூட்ஸ் (Roots) என்கிற அமைப்பை ஏற்படுத்தி மேலும் அதிகமான திறமையானவர்களுக்கு வாய்ப்புகொடுக்கவே இந்த மேடை. கலைகளின் மூலமாக சாதி ,மதமற்ற சமத்துவ சமூகத்தை  உருவாக்க, நாம் இணைந்து செயல்படுத்த இந்த கலைகள் நமக்கு கைகொடுக்கும் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவோம் என்றார்.



நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஹிப்பாப் ஆதி 



தனியிசைக்கலைஞனாக எனது ஆரம்பகாலத்தில்  எதாவது ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். தனியிசைக்கலைஞனாக இருந்து இப்போது இசையமைப்பாளராக நடிகனாக வந்திருக்கிறேன். 

சுதந்திர இசை இங்கு வெற்றிபெறும் சூழல் அதிகம் இல்லை இன்னும் ஏராளமான கலைஞர்கள் சின்ன வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரஞ்சித் அண்ணன் மீன் பிடித்துகொடுக்காமல் தூண்டிலை கொடுத்திருக்கிறார். இந்த கலைஞர்களுக்கு இந்த மேடையை அமைத்துக்கொடுத்தற்க்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மேடையில் பல திறமையாளர்களை நான் கண்டுகொண்டேன் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

வரும் காலங்களில் நானும் இதுபோன்ற சுதந்திர இசை மேடையை உருவாக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா